சேனையின் அதிபதியே

 

 

சேனையின் அதிபதியே

யுத்தத்தில் வல்லவரே

எந்தனின் கன்மலையே

ஜெயம் கொடுப்பவரே

 

                உம்மாலே இயேசுவே உம்மாலே

                எதிரியின் சேனைக்குள்ளே பாய்ந்திடுவேன்

                உம்மாலே இயேசுவே உம்மாலே

                எதிரியின் தடைகளை தாண்டிடுவேன(2)

 

விரல்களை யுத்தத்திற்கு பழக்குமையா - எந்தன்

கரங்கள் போருக்கு ஆயத்தமே

எதிரியின் திட்டங்களை அறிந்திடச் செய்யும்

உந்தன் நாமத்தால் வீழ்த்திடசெய்யும்;; - உம்மாலே

 

யோசுவாவின் சேனைகள் புறப்படுதே

எரிகோவின் மதில்களை தகர்த்திடவே

துதியின் எக்காளம் முழங்கியே நாங்கள்

உந்தன் நாமத்தால் சுதந்தரிப்போமே  - உம்மாலே

 

கிதியோனின் பட்டயம் எந்தன் கரங்களிலே

உந்தனின் பட்டயமாய் மாற்றிடுமே

இருக்கும் பலத்தோடு புறப்படுவோம் நாமே

இயேசுவின் நாமத்தால்; ஜெயமெடுப்போமே                 - உம்மாலே